• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அன்புமணி ராமதாஸ் முதல்வராக கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

November 25, 2021 தண்டோரா குழு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆள் இல்லை என்றால் அந்தமானில் இருந்து 50 பேரை அழைத்து வந்திருப்பேன் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

கடலூரில் பா.ம.க சார்பில் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:

தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக இருப்பது எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த கட்சி இனி இளைஞர்களின் கைகளில் தான் இருக்கிறது.10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிறப்பான வழக்கறிஞரை நியமனம் செய்துள்ளது.

எனவே, தடை உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வரும் தேர்தலில் பா.ம.க வெற்றி பெற்று அன்புமணி ராமதாஸ் முதல்வராக கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட ஆள் இல்லை என்கின்றனர். ஆளில்ல என்றால் அந்தமானில் இருந்து 50 பேரை அழைத்து வந்திருப்பேன் என்றார்.

மேலும் படிக்க