February 16, 2023
தண்டோரா குழு
கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் காரேகவுண்டம்பாளையம் கிராமத்தில் வரும் 22ம் தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை அடுத்து காரேகவுண்டம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் முன்மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி வருவாய் கோட்டாட்சியர் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுக்கலாம்.
மனுக்களை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 22ம் தேதி நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்க உள்ளார்.