• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அன்னூர் அருகே கோழிப் பண்ணையில் தீ விபத்து – 8500 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியான பரிதாபம்

March 20, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள ஆம்போதி கிராமம் கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமாக 2 கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது.2 கோழிப்பண்ணை ஷெட்டுகளில் சுமார் 8500 கறிக்கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பற்றியது. இச்சம்பவம் குறித்து கணேஷ்குமார் அன்னூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இவ்விபத்தில் கோழிப்பண்ணையில் இருந்த சுமார் 8500 கறிக்கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியாயின.மேலும்,இவ்விபத்தில் கோழித்தீவனங்கள்,மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின.இதன் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.இச்சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் கோழிப்பண்ணை உரிமையாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க