• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அன்னூரில் பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம் 1.80 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு

October 11, 2019 தண்டோரா குழு

அன்னூர் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த பெண்ணிடம் இருந்து 1.80 லட்சம் ரொக்கப்பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் இவர் கோவையில் உள்ள செல்போன் டவர்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.இவர் இன்று தனது மனைவி பிரபாவுடன் தன் குழந்தையுடனும் இருசக்கர வாகனத்தில் அன்னூர் வந்தனர். குழந்தை தூங்கியதால் அவரது மனைவி பிரபாவையும் குழந்தையும் பேருந்தில் வர சொல்லிவிட்டு செந்தில்குமார் தனது இருசக்கர வாகனத்தில் கோவை சென்றார்.

இதனையடுத்து பேருந்து நிலையத்தில் காத்திருந்த பிரபா கூட்ட நெரிசல் காரணமாக 2 பஸ்களில் மாறி மாறி ஏற முயன்றபோது தனது கைப்பையில் வைக்கப்பட்டிருந்த 1.80 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து விட்டனர். பின்னர் பணம் திருடப்பட்டது குறித்து அறிந்த பிரபா தனது கணவர் செந்தில்குமார் மூலம் அன்னூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். புகாரினை தொடர்ந்து அன்னூர் போலீசார் பேருந்து நிலையம் வந்து சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர். அங்கு வைக்கபட்ட கேமராக்கள் சரிவர எதுவுமே செயல்படாமல் பயனற்று இருந்ததால் ஏமாற்றமடைந்த காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் நின்றவர்களிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

அன்னூர் போலீஸ் மூலம் நகர பகுதிகளில் 20 க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைக்கபட்டுள்ள நிலையில் அவை ஏதுவுமே செயல்படாமல் இருப்பதால் குற்றவாளிகளுக்கு பயம் இன்றி இதுபோன்று செயல்படுவதாக கூறும் அன்னூர் பகுதி மக்கள் அதனை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க