May 8, 2021
தண்டோரா குழு
அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும், அதுதான் நோய்பரவலை தடுக்கும் என கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டால் தமிழகத்தில் கோடானகோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த முழு ஊரடங்கால் எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை.சலூன் கடைகள், காய்கறி வியாபாரிகள் என அனைத்து வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஊரடங்கு ஒரு தீர்வாகாது. இதற்க்கு முன் ஊரடங்கிற்குபின் நாட்டில் அதிகமாக நோய்தொற்று பரவியது.
அரசு தற்போது அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும், அதுதான் நோய்பரவலை தடுக்கும். அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் எந்த மக்களின் செலவிற்க்கும் பயனளிக்காது அரசு உடனடியாக குடும்ப அட்டைகளுக்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் மக்களின் பதட்டத்தை தனிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவிமையம் மூலம் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள் போன்றவற்றை அறிந்துகொள்ளும் விதமாக இனையதள சேவையை அறிமுகப்படுத்தி மக்களின் பதட்டத்தை போக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.