February 16, 2018
தண்டோரா குழு
மணல் குவாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மணல் குவாரிகளை மூட உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் விதிகளுக்கு புறம்பாக செயல்படும் மணல் குவாரிகளை மூட தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,மணல் குவாரிகள் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும்,சட்டவிரோதமாக மணல் கடத்தலை தடுக்க லாரிகளில் ஜிபிஎஸ் கருவியை பொருத்தவும்,அனைத்து மணல் குவாரிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.