• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்து பள்ளிகளிலும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் பெற புகார் பெட்டி வைக்க வேண்டும் – ஆட்சியர்

November 18, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் பாதுகாப்பு மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது. இதனை அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களும் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

அதன் படி, பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல் சார்ந்து புகார் அளிப்பதற்கு புகார் பெட்டி வைத்தல் வேண்டும். புகார் பெட்டி இரு சாவிகள் கொண்டதாகவும் அதில் ஒன்றினை மூத்த பெண் ஆசிரியரிடமும் மற்றொன்றை மாவட்ட சமூக நல அலுவலர் அல்லது மாவட்ட இலவச சட்ட ஆணையத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பள்ளிகளில் மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் அருகில் உள்ள காவல் நிலைய கண்காணிப்பாளரது தொலைபேசி எண் மற்றும் அலுவலக முகவரி தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்.
அந்த பலகையில் குழந்தைகள் உதவி மைய எண் 1098, பள்ளிக்கல்வித்துறையின் உதவி சேவை தொலைபேசி எண் 14417, பெண்கள் உதவி தொடர்பு எண் 181 போன்ற உதவி மைய எண்களும் இடம்பெறுதல் வேண்டும்.

அனைத்துப்பள்ளிகளிலும் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட வேண்டும். பள்ளிகளில் உளவியல் ஆலோசகர் மூலம் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். பெற்றோர் – வகுப்பாசிரியர் கூட்டம் சீரான கால இடைவெளியில் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க