• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனைத்துத் துறைகளிலும் உலகிற்கு அறிவைத் தருகின்ற நாடாக நம் நாடு விளங்குகிறது – நச்சிகேதா திவாரி

March 1, 2025 தண்டோரா குழு

கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா கல்லூரி வளாகத்தில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டர் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது.கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையில் நடைபெற்ற விழாவில்,கல்லூரியின் முதல்வா் முனைவா் சங்கீதா ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கான்பூா், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயந்திரப் பொறியியல் துறையின் பேராசிரியர் முனைவா் நச்சிகேதா திவாரி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளின் நாகரீகத்தில் ஒரு அடிப்படை உண்டு என்றும் ஐரோப்பிய நாடுகள் மொழியையும் மத்திய கிழக்கு நாடுகள் மதத்தையும் ஆப்பிரிக்க நாடுகள் பழங்குடியின பண்புகளையும் தம் நாகரிகத்தின் அடிப்படையாகக் கொண்டன என்றும் குறிப்பிட்டார்.

பாரத நாட்டின் நாகரிகத்தின் செழுமைக்கு மொழி,மதம்,உணவு, இனம் ஆகியன அடிப்படைகளாக அமையவில்லை என்றும் பாரத நாகரிகம் அறிவை அடித்தளமாகக் கொண்டது என்றும் இங்குத் தோன்றிய இந்து,பெளத்தம், சமணம், சீக்கியம் ஆகிய அனைத்து மதங்களும் அறிவின் அடிப்படையில் தோன்றியவை என்றும் வலியுறுத்தினார்.அனைத்துத் துறைகளிலும் உலகிற்கு அறிவைத் தருகின்ற நாடாக நம் நாடு விளங்குவதாக அவர் கூறினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கா்களுக்குச் சான்றிதழ்களையும் சிறந்த துறை, சிறந்த ஆராய்ச்சித்துறை ஆகியவற்றுக்கான சுழற்கோப்பைகளையும் சிறப்பு விருந்தினா் வழங்கி கவுரவித்தார்.

விழாவின் நிறைவில் மாணாக்கா்களின் கண்கவா் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன

மேலும் படிக்க