February 10, 2020
தண்டோரா குழு
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 39- வது தமிழ் மாநில மாநாடு கோவையில் நடைபெற்ற மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோவை தெலுங்குபாளையம் அ௫கே உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் 39- வது மாநில மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்களை அஞ்சல்துறையின் அகில இந்திய தலைவர் சுப்பிரமணியன் பேசும்போது ,
7 வது ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்கப்படவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்யப்பட வேண்டும், அஞ்சல்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவேண்டும்,அஞ்சல்துறையை தனியார் மயம் ஆக்கக்கூடாது, கிராமப்புற அஞ்சல் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையாக பணி நிரந்தரம் செய்யப்படவேண்டும் என தெரிவித்தார்.
மேலும் இந்த மாநாட்டில் பராசர் பொது செயலர், ராமமூர்த்தி, வீரமணி மாநில செயலர்,கி௫ஷ்ணன் மாநில பொது செயலர்,ஸ்ரீதரன் மற்றும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.