• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனுமதியுடன் இயங்கும் சிறு,குறு தொழில்நிறுவனங்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் கெடுபிடி

June 17, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான போசியா சார்பில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் தற்போது தளர்வுகள் இல்லாத ஊரடங்கு தொடர்கின்றது. இந்த ஊரடங்கு சட்டத்தைகாலத்திலும் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும்
தொழிற்சாலைகள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது.
இதன்படி விவசாய இயந்திரங்கள், ஆட்டோமொபைல், மருத்துவ உபகரணங்கள், ராணுவ உபகரணங்கள், மற்றும் உணவு உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளும், ஏற்றுமதி செய்யும் தொழில்களும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு தமிழக அரசின் அறிவிக்கையின் படி இயங்கும் தொழிற்சாலைகளை, சோதனை
செய்ய மாநகராட்சி அதிகாரிகள் வருகின்றனர்.

அப்போது சோதனைக்கு வரும் அதிகாரிகள் செயல்படும் தொழில்நிறுவனங்களில், மாவட்ட
கலெக்டர் கொடுத்துள்ள அனுமதி கடிதம் உள்ளதா? என கேட்கின்றனர்.ஊரடங்கு ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற் பிரிவுகளுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தனியாக அனுமதிச்சான்று எதும் வழங்கப்படவில்லை.

சோதனை செய்யும் அதிகாரிகள் இதை ஏற்கமறுத்து அபாராதம் விதிக்கின்றனர். மாவட்ட கலெக்டர் அனுமதிச்சான்று இல்லை என்றால் தொழிற்சாலையை மூடும்படி நிர்ப்பந்தம் செய்கின்றனர். இதனால் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வரும் ஒருசில தொழிற்சாலைகளும்முடக்கப்படுகின்றன. தொழிலாளர்களும் வேலை இழந்து தவிக்கின்றனர்.

இந்நிலையில்,அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி சான்று தேவையில்லை என மாவட்ட நிர்வாகம் தெளிவுப்படுத்தியுள்ளது. எனவே மாநகர் பகுதிகளில் இயங்கக்கூடிய தொழிற் நிறுவனங்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் கெடுபிடியில் ஈடுபடுவது குறித்து மாநகராட்சி கமிஷனர் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

மேலும் படிக்க