• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அனல்மின் நிலைய மின்னுற்பத்திக்கு நிலக்கரி தேவை – பிரதமருக்கு முதல்வர் கடிதம்

September 14, 2018 தண்டோரா குழு

அனல்மின் நிலைய மின்னுற்பத்திக்கு நிலக்கரி தேவை பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் எண்ணூர் அனல் மின் நிலையம் மூலமாக தற்போது 450 மெகாவாட் மின்சாரமும், வடசென்னை அனல் மின்நிலையம் மூலமாக 2 ஆயிரத்து 430 மெகாவாட் மின்சாரமும், வல்லூர் தேசிய அனல்மின் நிலையம் மூலமாக ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள அனல் மின்நிலையங்களை பொறுத்தவரை நிலக்கரி பற்றாக்குறை பிரச்னையால், முழுமையான அளவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலையிலேயே உள்ளது. தமிழக அரசு தரப்பிலும் நிலக்கரி பற்றாக்குறை குறித்து தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் அனல்மின் நிலைய மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில்,

தமிழக அனல் மின் நிலையங்களுக்கு உபயோகப்படுத்தப்படும் நிலக்கரி இன்னும் 3 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளது. தமிழகத்தில் தினசரி மின் உற்பத்திக்கு சராசரியாக 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுவதாகவும், உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு அறிவுறுத்தி, தமிழகத்திற்குத் தேவையான நிலகரியை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனால், ஒரு நாள் மின் உற்பத்திக்கு தேவையான 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வேண்டும் நிலக்கரி பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொண்டுள்ளார்

மேலும் படிக்க