July 6, 2018
தண்டோரா குழு
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை மாற்றம் வேண்டும்,அந்நிய முதலீட்டை கண்டித்தும், ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தியும் வருகிற 24ஆம் தேதி தமிழக வணிகர்கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெல்லி நோக்கி பேரணி மற்றும் தர்ணா போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் பேக்கரி கண்காட்சியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நவீன முறையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க உதவும் தொழில்நுட்பம்,நாடு முழுவதும் பேக்கரி தொழிலில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.பீட்சா, பர்கர் போன்ற அந்நிய உணவிற்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரி என்ற நிலையில்,சாமானியர்கள் அதிகம் பயன்படுத்தும் உள்நாட்டு உணவு பொருட்கள் விற்பனையில் உள்ள பேக்கரிக்கு 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரி விதிப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் ஜி.எஸ்.டி.யில் மாற்றம் கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
பாராளுமன்றம்,சட்டமன்ற போன்ற அரசாங்கம் செய்யக்கூடிய உணவு கூடங்களில் கூட நடத்த இயலாத வகையில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் உள்ளதாகவும்,இந்தியாவின் நடைமுறைக்கு ஏற்ப சட்டத்தை மாற்ற வேண்டும்.மத்திய,மாநில அரசு அந்நிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம்.வால்மார்டை அனுமதிக்க ஆய்வு நடத்தியதை கண்டித்தும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24ஆம் தேதி டெல்லியில் தமிழக வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக கூறினார்.
மேலும்,23,24,25 ஆகிய மூன்று நாட்களில் அகில இந்திய அளவில் அனைத்து மாநிலங்கள் சார்பில் நடைபெறும்.மாநாட்டில் இந்த சட்டங்களை மாற்றவில்லை என்றால் பாராளுமன்றை தேர்தலை எதிர்க்கொண்டு பல்வேறு போராட்டம் நடத்துவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்.மோடி தலைமையிலான ஆட்சி அமைக்க நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் ஆதரவாக இருந்ததை குறிப்பிட்டவர் மத்திய,மாநில அரசுகள் கூட்டாக சுழற்சி முயற்சியில் ஏமாற்றி வருவதாகவும் குற்றச்சாட்டினார்.