• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை ஒரு மாதத்திற்குள் முடிக்கவில்லை போராட்டத்தை மேற்கொள்வோம்- ஜி.கே.நாகராஜ்

August 11, 2022 தண்டோரா குழு

கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பாஜக விவசாயி அணி மாநில தலைவர் ஜி கே நாகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

1856 கோடியில் 3 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யால் தொடங்கப்பட்ட அத்திக்கடவு அவினாசி திட்டம், தற்போது மிக மோசமாக கேட்பாரற்று புறக்கணிக்கப்பட்டு கிடப்பதாக தெரிவித்தார். இத்திட்டத்தினால் கோவையில் உள்ள சுமார் 2000 குளம் குட்டைகள் பயன் பெறும் எனவும் இதில் இன்னும் 800 குட்டைகளை இணைக்க வேண்டி உள்ளதாகவும் கூறினார்.

கொரொனா காலத்திலும் எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்தை தடையில்லாமல் இப்பணிகளை மேற்கொண்டதாக தெரிவித்தார். இத்திட்டம் 2021 ஜனவரி மாதம் முடிக்கப்பட வேண்டிய திட்டம் எனவும், ஆனால் திமுக அரசு பதிவியேற்ற பின்பு இதுவரை அத்திட்டம் கிடப்பில் உள்ளதாக கூறினார். 2.2 கிமீ க்கு பைப் போடாததால், 17 மாதங்களாக இத்திட்டம் கிடப்பில் கிடப்பதாக தெரிவித்தார். இத்திட்டம் மட்டும் கடந்த ஆண்டு முடிக்கப்பட்டிருந்தால் பல்வேறு பயன்கள் கிடைத்திருக்கும் என தெரிவித்தார்.

மேலும் திமுக வின் திட்டமிட்ட தூண்டுதலால் சிலர் அப்பகுதியில் பைப் லைன் போடவிடாமல் தடுத்து வருவதாக தெரிவித்தார். திமுக ஆட்சி வந்த பிறகு பைப் லைன் போடுவதற்கு சில விவசாயிகள் வேண்டுமென்ற திட்டத்தை நிறுத்த இழப்பீடு கேட்பதாக தெரிவித்தார். இது குறித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியும் எவ்வித பதிலும் இல்லை என தெரிவித்தார். இந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தின் முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தி செப்டம்பர் மாத இறுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை ஒன்றிணைத்து அத்திக்கடவு அவினாசி திட்ட அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தையும், 1000 வாகனங்களோடு சென்னையை நோக்கி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை மேற்கொள்ளதாக தெரிவித்தார்.

செப்டம்பர் மாத இறுதிக்குள் இத்திட்டத்தை முடிக்க அரசிற்கு கால அவசாகம் அளிப்பதாக கூறினார். மேலும் அதனை முடிப்பதற்கு அதிகாரிகள் அரசு அலுவலர்கள் தயாராக உள்ளதாகவும் அரசு தான் தாமதபடுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தை தாமதப்படுத்தி மீண்டும் திட்டத்தின் மதிப்பை அதிகரித்து அதன் மூலம் லாபம் திமுக துடிக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த முன்னெடுப்பு இல்லை என்றும் சிலவற்றை செயல்படுத்தும் போது தமிழக அரசு செய்வது போல் ஸ்ட்க்கர் ஒட்டும் வேலையை செய்வதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்த உடன் மத்திய அரசின் முழுமையான திட்டங்கள் மக்களிடம் சேரும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க