• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதி நவீன ஜீரண நல மையம் கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் துவக்கம் !

August 26, 2021 தண்டோரா குழு

ஜீரணக் கோளாறுகளை கண்டறிவதற்கான அதி நவீன ஜீரண நல மையம் கோவை வி.ஜி.எம் மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் உலகெங்கும் ஜீரணக்கோளாறு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது நிலையில் கோளாறுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை சிங்காநல்லூரில் உள்ள விஜிஎம் மருத்துவமனை சார்பில் உயர்நிலை ஜீரண பரிசோதனை நல மையம் துவங்கப்பட்டுள்ளது.

இதயத்தின் மின் அலைகளை எவ்வாறு ஈசிஜி கண்டறிகிறதோ அதுபோல் இரைப்பயின் மின் அலைகளை இக்கருவி கண்டறியும் எனக் கூறப்படுகிறது. கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை சிலருக்கு பசியின்மை, பொருமல் போன்றவை ஏற்பட்டாலும் இக்கருவியின் மூலம் சுலபமாக கண்டறியும் என்றும் விஜிஎம் மருத்துவமனையின் சேர்மன் மோகன் பிரசாத் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

இந்த எலக்ட்ரோ கேஸ்ட்ரோ கிராபி என்ற இக்கருவியின் மூலம் இரைப்பையில் பிரச்சினை உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்தில் பிரச்சனை என்ன என்பதை கண்டறியும் இலகுவான முறை இதன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க