• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக தேமுதிக இடையேயான கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நல்ல படியாக முடிந்துவிடும் – எஸ்.பி.வேலுமணி

March 5, 2019 தண்டோரா குழு

அதிமுக தேமுதிக இடையேயான கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நல்லபடியாக முடிந்துவிடும் என கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை விமானநிலையம் விரிவாகம் பணிக்காக நிலம் கொடுத்த, உரிமையாளர்கள் 13 பேருக்கு ரூ. 1.60 கோடி இழப்பீட்டு தொகை வழங்கினார். மேலும், 151 மாற்றுத்திறனாளிகளுக்கு, 25லட்சத்தில் 83 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூன்று சக்கர வாகனம், தையல் இயந்திரம் , செயற்கை கால், ஆகிய நலத்திட்ட உதவிகள், புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 80 பேருக்கு, 5.12 லட்சம் மதிப்பிலான நாட்டு கோழி குஞ்சுகளும் வழங்கினார்.

இந்த நிகழச்சிக்கு பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,

விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுக்கும் மக்கள் வழிகாட்டி மதிப்பினை அதிகரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர், முதல்வர் அறிவுறித்தலின் பேரில் வழிகாட்டி மதிப்பு அதிகரிக்கப்பட்டு, வீடு கொடுப்பவர்களுக்கு புதியாக நிலம் கொடுத்து வீடு கட்டி கொடுக்கும் திட்டமும் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தற்கு இது முக்கியமான நாள் என குறிப்பிட்ட அவர்,
கோவை விமான நிலைய விரிவாக்கம் நடைபெற்றால் ஐ.டி நிறுவனங்கள் உட்பட ஏராளமான நிறுவனங்கள் வரும், லட்சகணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், வியாபாரம் பெருகும் , வருவாய் அதிகரிக்கும் எனக் கூறினார். கோவை சுங்கம் பாலம், கவுண்டம்பாளையம் பாலம் ஆகியவற்றிக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகின்றார் எனவும் அப்போது குறிப்பிட்டார். தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு, முதல்வரும்,துணை முதல்வரும் இதற்கு பதில் சொல்லி இருக்கின்றனர், நல்லபடியாக முடிந்துவிடும் எனவும் பதில் அளித்தார்.

மேலும் படிக்க