February 21, 2018
தண்டோரா குழு
அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிய தமிழக மக்கள் தயாராகிவிட்டனர் என டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மதுரையில் நடத்தும் கட்சி அறிமுக பொதுக்கூட்டத்தில் டில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர்,
டெல்லியில் மாற்றம் ஏற்பட்டது போல், தமிழகத்திலும் கமல் தலைமையில் மாற்றம் ஏற்படும். கமலை களத்தில் போராடும் நிஜ ஹீரோகவா பார்க்கிறேன்.சிறந்த அரசியல் மாற்றத்தை கமல்ஹாசன் தருவார்.தமிழ்நாடு மாற்றத்திற்காக காத்திருக்கிறது.
கமலின் இந்த துவக்கம் சிறப்பானது.ஊழலுக்கு எதிராக ஒன்றிணைந்ததற்காக மகிழ்ச்சி.கறைபடியாத கரமுடையவர் கமல்.அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள். கமல் யதார்த்த வாழ்க்கையின் கதாநாயகன்.திரைப்படத்தில் ரசிகனாக இருந்த நான், அவரது நிஜவாழ்க்கையிலும் ரசிகனாக ஆனேன்.
தமிழக மக்கள் இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கி கிடந்தனர். டெல்லியில் நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சாதனையை தமிழகத்தில் கமல் செய்து முடிப்பார்.இவ்வாறு அவர் பேசினார்.