• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துள்ளான ராஜேஸ்வரியின் பெற்றோர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு

November 18, 2019

கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்து விபத்துள்ளான ராஜேஸ்வரியின் பெற்றோர் மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் மனு அளித்தனர்.

கடந்த 11 ம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியில் நடந்த விபத்தில் லாரி மோதி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்கிற அனுராதா படுகாயமடைந்தார். சாலையோரத்தில் நடப்பட்டிருந்த அதிமுக கொடிகம்பம் சாய்ந்ததே விபத்திற்கு காரணமென உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனிடையே ரத்தநாளங்கள் பாதிக்கப்பட்டதால் ராஜேஸ்வரியின் இடதுகால் மருத்துவர்களால் அகற்றப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின் ராஜேஸ்வரியின் குடும்பத்திற்கு 5 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

இந்நிலையில் சுகுணாபுரம் பகுதியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை, ராஜேஸ்வரியின் பெற்றோர்களான நாகநாதன் – சித்ரா ஆகியோர் அவரது வீட்டில் சந்தித்தனர். அப்போது மருத்துவ உதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்க கோரி, கோரிக்கை மனு அளித்தனர். மேலும் தீவிர சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்ட அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் படிக்க