• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது உறுதி!

March 6, 2019 தண்டோரா குழு

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ்,மதிமுக, சிபிஐ, சிபிஎம், ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக தேமுதிகவை இழுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்க விஜயகாந்த் தேமுதிக மூத்த நிர்வாகிகளுடன் இன்று மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதற்கிடையில்,இன்று சென்னையில் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த் மற்றும் ஜி.கே.வாசன் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.கூட்ட மேடையின் எல்.இ.டி திரையில் மோடி மற்றும் தலைவர்கள் படங்களுடன் விஜயகாந்த் படமும் இடம்பெற்றுள்ளது. அதைப்போல் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அதிமுக கூட்டணியில் தேமுதிக உள்ளது எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில்,அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 4 தொகுதிகளில் 2 இடங்கள் தனித்தொகுதிகளாக வழங்குவதாக அதிமுக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்நேரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என இருகட்சி தொண்டர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க