• Download mobile app
15 Oct 2026, ThursdayEdition - 3900
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அ.தி.மு.க. ஒரு எஃகு கோட்டை – வி.கே.சசிகலா

February 11, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலர் சசிகலா சனிக்கிழமை போயஸ் தோட்ட வளாகத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்களின் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது,

“கட்சி மற்றும் ஆட்சியை வழி நடத்த வேண்டிய பொறுப்பு எனக்குள்ளது. அ.தி.மு.க வின் ஏராளமான தொண்டர்களையும், அதிமுகவையும் நான் பத்திரமாக காப்பாற்றுவேன்.

ஒன்றரை கோடி தொண்டர்கள் நம்முடன் இருக்கும் வரை நம்மை பிரித்தாள நினைக்கும் யாராக இருந்தாலும் தோற்றுப் போவார்கள். ஜெயலலிதா சொன்னது போல நம்முடைய இயக்கம் ஒரு எஃகு கோட்டை.அந்த கோட்டையை யாராலும் அசைக்க முடியாது.

ஜெயலலிதா பல சோதனைகளைச் சந்தித்து தான் இந்த கழகத்தை நடத்தி வந்தார்.நாம் நியாயமாகவும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதால் கொஞ்சம் அமைதி காக்கிறேன்.ஓரளவுக்கு தான் பொறுமையைக் கையாள வேண்டும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம்”.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க