• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களுக்கு வரிவசூலர்கள் பணி வழங்கியதிற்கு எதிர்ப்பு

April 23, 2022 தண்டோரா குழு

மாநகராட்சியில் வார்டுக்கு ஒருவர் வீதம், 100 வரி வசூலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், 54 பேர் கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.இவர்களில் 21 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த 21 பேரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம், மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களில் 21 நபர்களுக்கு தற்போது வரி வசூலிக்கும் அலுவலர்களாக பணி நியமனம் வழங்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

அவர்களுக்கு வழங்கிய பணி நியமனத்தை திரும்ப பெறக் கோரிய வழக்கு, சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால், 21 நபர்களை காத்திருப்போர் பட்டியலில் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க