• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுக ஆட்சிமன்றக் குழு தலைவராக சசிகலா – டிடிவி தினகரன்

March 9, 2017 தண்டோரா குழு

அ.தி.மு.க.வின் ஆட்சிமன்றக் குழுவின் (பார்லிமென்டரி போர்டு) தலைவராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.சென்னை ஆர்.கே .நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இது குறித்து, செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் வியாழக்கிழமை கூறுகையில்,

“அ.தி.மு.க.வின் ஆட்சி மன்றக் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக க் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக செங்கோட்டையன், டிடிவி தினகரன், பா வளர்மதி, ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால், தமிழ்மகன் உசேன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

மேலும் படிக்க