• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுகவை அம்மா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இங்கிருந்து செல்கிறேன் – சசிகலா பேட்டி !

October 16, 2021 தண்டோரா குழு

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று மரியாதை செலுத்தினார்.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான பிறகு முதல் முறையாக சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரது கண்கள் கலங்கின.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா பேசுகையில்,

நான் ஏன் தாமதமாக இங்கு வந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். இத்தனை ஆண்டுகள் நான் மனதில் சேர்த்து வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா முன்பு இறக்கி வைத்துவிட்டேன். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் தொண்டர்களுக்காகவே வாழ்ந்தவர்கள்;

தமிழக மக்களுக்காக வாழ்ந்தவர்கள். நிச்சயம் தொண்டர்களையும், கழகத்தையும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு புறப்படுகிறேன்’. என்றார்.

மேலும் படிக்க