• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிமுகவில் இணைந்தார் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு !

December 8, 2018 தண்டோரா குழு

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் தன்னை இன்று இணைத்துக் கொண்டார்.

பாலாவின் பிதாமகன் படத்தின் மூலம் தமிழில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் கருப்பு ராஜா. இவர் கிராமப்புற பின்னணி கொண்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சந்தானத்துடன் இணைந்து 2வது கதாநாயகனாக அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையில், கஞ்சா கருப்பு தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இந்நிலையில், கஞ்சா கருப்பு முதலமைச்சர் பழனிசாமியை இன்று சந்தித்து, அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்துக் கொண்டார்.

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியை அவரது வீட்டில் நடிகர் கஞ்சா கருப்பு இன்று சந்தித்தார். அப்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க