June 22, 2019
தண்டோரா குழு
அதிமுகவின் நாடாளுமன்ற தலைவராக ரவீந்திரநாத் குமாரை நியமிப்பதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
17வது மக்களைவை தேர்தலில் அதிமுக சார்பில் தேனி மக்களவை தொகுதியில் இருந்து ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். இந்நிலையில், அதிமுகவின் நாடாளுமன்ற தலைவராக ரவீந்திரநாத் குமாரை நியமிப்பதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மக்களவை உறுப்பினரான ரவீந்திரநாத் குமாரை அதிமுகவின் நாடாளுமன்ற மக்களவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.