• Download mobile app
26 Sep 2025, FridayEdition - 3516
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா எலக்ட்ரிக் ஆட்டோ :கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி அறிமுகம்

September 26, 2025 தண்டோரா குழு

கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் மின்-மொபிலிட்டி பிரிவான கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம், பிரபல கிரீவ்ஸ் எல்ட்ரா சிட்டியின் மேம்படுத்தப்பட்ட புதிய கிரீவ்ஸ் எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா ஆட்டோவை அறிமுகம் செய்துள்ளது.

நகர்ப்புற போக்குவரத்தில் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா, கூடுதல் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் அனைத்தையும் கூடுதலாக கொண்டுள்ளது. எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா, சிறந்த செயல்திறன், தொழில்நுட்பம், நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் சக்திவாய்ந்த செயல் திறனுடன் அன்றாட நகர்ப்புற போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 170 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். மேலும் மணிக்கு 60 கிமீ வேகம் செல்லும் திறன் கொண்டது. நகரப் பயணத்தை வேகமாகவும், மென்மையாகவும் மாற்றும் இந்த ஆட்டோ டிஸ்டன்ஸ்-டு-எம்ப்டி மற்றும் நேவிகேஷன் ஆகியவற்றைக் கொண்ட 6.2” பிஎம்விஏ டிஜிட்டல் கிளஸ்டரையும் வழங்குகிறது.மேலும் 12 இன்ச் ரேடியல் டியூப்லெஸ் டயர்களைக் கொண்டுள்ளது.

ஒருமுறை சார்ஜிங் மூலம் எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா, பெங்களூருவிலிருந்து ராணிப்பேட்டை வரை 324 கிலோமீட்டர் பயணித்து சாதனையைப் படைத்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதன் காரணமாக இது நாட்டின் மிக அதிக தூரம் பயணித்த மின்சார மூன்று சக்கர வாகனம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா பெரிய 180மிமீ பிரேக் டிரம்கள், வலிமைமிக்க பக்கவாட்டு பேனல்கள் மற்றும் பின்புறத்தில் பார்க்கும் வசதியுடன், இது ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் இருவருக்கும் பாதுகாப்பை வழங்குகிறது.

அதிகபட்ச 9.5 கிலோவாட் மோட்டார் மற்றும் 10.75 கிலோவாட் ஐபி67-மதிப்பிடப்பட்ட எல்எப்பி பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த வாகனம், செயல்திறனுடன் நீடித்து உழைக்கும் தன்மையை ஒருங்கிணைக்கிறது. இதற்கான சார்ஜிங் நேரம் என்பது 4 முதல் 5 மணிநேரமாக உள்ளது. 5 ஆண்டுகள் அல்லது 1.2 லட்சம் கிலோ மீட்டர் பேட்டரி உத்தரவாதம், 3 ஆண்டுகள் அல்லது 80,000 கிலோமீட்டருக்கான உத்தரவாதம் ஆகியவற்றின் காரணமாக எந்தவித கவலையும் இல்லாத மின்சார வாகனமாக இது உள்ளது.

இது குறித்து கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விகாஸ் சிங் கூறுகையில்,

எங்களைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இந்தியருக்கும் ஸ்மார்ட் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்களை வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் ஆகும். எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா இந்த தொலைநோக்குப் பார்வையை தனித்துவமான வரம்பு, இன்டர்நெட் ஆப் திங்ஸ் உடன் டிஜிட்டல் கிளஸ்டர், சக்திவாய்ந்த பேட்டரி, வலுவான அதிகபட்ச வேகம் மற்றும் நம்பகமான கிரீவ்ஸ் விற்பனைக்குப் பிந்தைய வாக்குறுதி போன்ற ஸ்மார்ட் அம்சங்களுடன் வருகிறது. அதிநவீன பேட்டரி தொழில்நுட்பத்துடன், நம்பிக்கையை வளர்க்கும் மற்றும் பாதுகாப்பான, நீண்ட கால மின்சார வாகனங்களுக்கான பிரிவில் நாங்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வாகன அனுபவத்தையும் பொருளாதாரத்தையும் வழங்குவதில் எங்களின் முழு கவனமும் உள்ளது. அந்த வகையில் எங்களின் புதிய எல்ட்ரா சிட்டி எக்ஸ்ட்ரா மேம்பட்ட பேட்டரி உடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட தூரம் பயணிக்கும் வசதி மற்றும் நீண்ட ஆயுளைக் கொண்ட பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க