June 4, 2021
தண்டோரா குழு
அதிக கட்டணம் வசூலித்ததால் கோவை முத்தூஸ் மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சை அளிக்க சுகாதார துறை தடை விதித்துள்ளது.
கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில்,கோவையில் கொரொனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனை, தொடர்ந்து சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனை நிர்வாகம் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்காத நிலையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் உரிமத்தை சுகாதாரத்துறை ரத்து செய்தது.
மேலும்,மூன்று தனியார் மருத்துவமனையின் மீது விசாரணை நடந்து வருகிறது.