• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அதிகாலை வேலையில் காட்டு யானைகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்துகிறது – விவசாயிகள் வேதனை

February 24, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி பேசியதாவது: கோவை வடக்கு வட்டம் பெரியநாயக்கன்பாளையம், குருடம்பாளையம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகப்படியாக வாழை விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் அதிகாலை வேலைகளில் காட்டு யானைகள் வந்து வாழைகளை சேதம் செய்கின்றன. நேற்று இரவு 2 மணி அளவில் கூட தொப்பம்பட்டி பகுதியில் யானை புகுந்து 50க்கும் மேற்பட்ட வாழைகளை சேதப்படுத்தியது. இதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய இழப்பீடு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டம் தலைவர் சு. பழனிசாமி பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் தென்னை, வாழை, மா மற்றும் இதர காய்கறிகளை விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக தென்னையில் நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை காரணமாக கொண்டு ஒரு சில போலி மருந்து கம்பெனிகள் விவசாயிகளிடம் ஆசை வார்த்தை கூறி மருத்துகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயத்திற்கு நன்மை செய்யக்கூடிய தேனீக்கள், பூச்சிகள் போன்றவைகள் அழிந்து வருகின்றன. நொய்யல் ஆற்றில் மணல் கடத்துவதை தடுக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த அரசால் கட்டமைக்கப்பட்ட கட்டுமானங்களை பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க