• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அண்ணா மார்க்கெட்டில் தொடர்ந்து கடை நடத்த அனுமதிக்க வேண்டும் வியாபாரிகள் மேயரிடம் மனு

May 23, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை அண்ணா மார்க்கெட் 35 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இதனிடைய கோவை மாநகராட்சியால் பொது ஏலத்தில் விடப்படும் கடைகளை கடந்த 35 வருடங்களுக்கு மேலாக சுமார் 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஏலம் எடுத்து கடை நடத்தி வருகிறோம். காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற வியாபாரங்கள் செய்து வருகிறோம். இதில் வியாபாரிகள் அவரது குடும்பத்தினர், கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரமும் அடங்கி உள்ளது.

இதனிடையே கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணா மார்க்கெட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே சீரமைப்பு பணிகள் முடியும் வரை கோவை கவுண்டம்பாளையம் எருக்கம்பெணி மைதானத்தில் தற்காலிகமாக எங்களது செலவில் கடைகளை அமைத்து வியாபாரம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மின்சாரம், குடிநீர் கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே இந்த விவாகரத்தில் ஆட்சியர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகம் செய்து கொண்டே மார்க்கெட்டை சீரமைக்க வழிவகை ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மேலும் படிக்க