April 6, 2018
தண்டோரா குழு
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த எம்.கே.சூரப்பாவை கவர்னர் பன்வாரிலால் நியமனம் செய்தார்.இந்நிலையில் எம்.கே.சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் ஜெயக்குமார்:ஆளுநர் தனது அதிகாரத்துக்குட்பட்டு துணைவேந்தரை நியமித்துள்ளார்; இதில் அரசுக்கு எந்த சம்பந்தமுமில்லை.
வைகோ:அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதற்கு கண்டனம்.
தமிழிசை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் திறமைகளின் அடிப்படையில் மட்டுமே நியமனம்…காவி கிடையாது…கல்வி மட்டுமே!
திருநாவுக்கரசர்:அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் ஏற்க முடியாது,தமிழகத்தில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?…
ஜி.ராமகிருஷ்ணன்:அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பரிசீலிக்க வேண்டும்; ஆளுநர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்.
கமல்ஹாசன்:கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை கேட்டோம்; துணைவேந்தரை கொடுத்திருக்கிறார்கள்…
வேல்முருகன்:கர்நாடகாவில் பாஜக ஓட்டுகேட்கவே அண்ணா பல்கலை. துணைவேந்தராக சூரப்பா நியமனம்.
டிடிவி தினகரன்:கர்நாடகாவை சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிப்பது தமிழக உரிமையை பாதிப்பதுபோல் உள்ளது.