• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அணிகள் இணைந்த பிறகு தினகரனுடன் எனக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை – ஓபிஎஸ்

October 5, 2018 தண்டோரா குழு

அணிகள் இணைந்த பிறகு தினகரனுடன் எனக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

முதல்வா் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு துணைமுதல்வர் ஓ.பன்னீா் செல்வம் கடந்த ஆண்டு ஜுலை 12 ஆம் நாள் தன்னை சந்தித்தார் என அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார். இது தமிழக அரசியல் வட்டராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இன்று சென்னையில் துணைமுதல்வர் ஓ.பன்னீா் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

டிடிவி தினகரன் குற்றச்சாட்டு அனைத்தும் தவறானது. தான் முதல்-அமைச்சராக முடியவில்லை என்ற மனச்சுமையில் சுற்றி வருகிறார் தினகரன். அதனால் அபாண்டமான குற்றச்சாட்டுகளை என்மீது கூறிவருகிறார். ஆனால் அவரை சந்தித்தது உண்மை தான். அவர் மனமிட்டு பேச விரும்பியதாக கூறியதால் தான், அவரை சந்திக்க சென்றேன். அவரை சந்திக்க ஏற்ப்பாடு செய்த நபர் இன்று என்னிடம் வந்து, அதற்காக மன்னிப்பு கேட்டார். எப்பொழுது அதிமுகவில் மீண்டும் சேர்ந்தனோ, அன்று முதல் டிடிவி தினகரனை சந்திக்கவில்லை. நேற்று காலை திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலையொட்டி கழக கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஒட்டு மொத்த நிர்வாகிகளும், பொதுமக்களும் சிந்தாமல் சிதரமாறல் இருப்பதை கண்டு பேசியதை கேட்டு குழப்பமான மனநிலையில் தினகரன் உள்ளார். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். நான் அரசியல் பயணத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு வருகிறேன்.

குழப்பத்தை ஏற்படுத்த , திட்டமிட்டு குற்றச்சாட்டை தினகரன் கூறி வருகிறார்.பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தி இருக்கிறார் தினகரன். தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. என்னால் ஆட்சி கவிழாது என கட்சி இணைப்பின் போது சொன்னேன். கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற நிபந்தனையற்ற ஆதரவையும் தெரிவித்தேன். ஆட்சியைக் கவிழ்க்க தினகரன் தொடர்ந்து சதி செய்து வருகிறார். சசிகலா குடும்பத்திற்குள் கட்சியும், ஆட்சியும் சென்றுவிடக் கூடாது என தர்மயுத்தம் செய்து வருகிறேன். 18 பேரை வைத்துக் கொண்டு தரக்குறைவான அரசியல் நடத்துகிறார் தினகரன்.

நான் இருக்கும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவன். மத்திய அரசோடு கூட்டு சேர்ந்து ஆட்சியை சேர்ந்து ஆட்சியை கலைக்கப் பார்ப்பதாக தினகரன் என் மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார். ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தில்லு முல்லுகளையும் செய்து மகக்ளை ஏமாற்றியவர் தினகரன். திருப்பரங்குன்றத்துக்கு வர விடக்கூடாது என தொண்டர்களிடம் பேசினோம். நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற மனக்கவலையுடன் தினகரன் உள்ளார். எந்த காலத்திலும் எனக்கு பதவி ஆசை இல்லை. மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன். அந்த திருப்தியே எனக்கு போதும். அணிகள் இணைந்த பிறகு தினகரனுடன் எனக்கு ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. எங்கள் சந்திப்பில் ரகசியம் இருப்பதாக தினகரன் கூறுகிறார். அவர் ரகசியத்தை வெளியிடட்டும். அதற்கு பதில் என்னிடம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க