• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அட்சய திருதியை முன்னிட்டு கோவையில் ஒரே நாளில் 50 கோடி ரூபாய் மதிப்பில் தங்க நகைகள் விற்பனை

May 3, 2022 தண்டோரா குழு

அட்சய திருதியை முன்னிட்டு தொழில் நகரான கோவையில் ஒரே நாளில் 50 கோடி ரூபாய் மதிப்பில் 100 கிலோ தங்க நகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம் கூறியதாவது:

அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பல மடங்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.இதன் காரணமாக அன்றைய தினத்தில் வழக்கத்தைவிட தங்க நகைகள், பவுன் காசு,உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகம் காணப்படும்.

இந்த ஆண்டு அட்சய திருதியை முன்னிட்டு ஒரே நாளில் 50 கோடி ரூபாய் மதிப்பில் 100 கிலோ எடையிலான தங்க நகைகள் கோவை நகரில் உள்ள கடைகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இருப்பினும் மோதிரம் தோடு சின்ன செயின் உள்ளிட்ட சிறிய அளவிலான தங்க நகைகளை வாங்கவே பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.

அட்சய திருதியை தினத்தில் மொத்தம் விற்பனை செய்யப்பட்ட நகைகளில் மேற்குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த நகைகள் மட்டுமே மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அட்சய திருதியை தினத்தில் ஓரளவு நல்ல விற்பனை அனைத்து தங்க நகைக் கடைகளிலும் காணப்பட்டது. இதனால் தங்க நகை தொழிலில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க