• Download mobile app
29 Oct 2025, WednesdayEdition - 3549
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடுத்த 3 முதல் 5ஆண்டுகளில் 100 கோடி இந்திய ரூபாயை முதலீடு செய்ய ஆம்வே இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது

October 29, 2025 தண்டோரா குழு

ஆம்வே நிறுவனத்தின் உற்பத்திப் பயணத்தின் 10 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மைக்கேல் நெல்சன் இந்த வாரம் இந்தியாவிற்கு வருகை புரிந்தார்.

உலகளாவிய செயல்பாடுகளில் பங்கேற்கும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய ஆம்வேயின் மூன்று உலகளாவிய உற்பத்தி மையங்களில் ஒன்றான இந்தியாவின் உத்திசார்ந்த முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் ஒரு மைல்கல்லே இந்த வருகை. இந்த வலிமையான அடித்தளத்தின் மீது கட்டமைத்து ஆம்வே வணிக உரிமையாளர்/விநியோகஸ்தர்களின் திறன்களை மேலும் மேம்படுத்தவும், அதன் நேரடி இருப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்தவும், வாடிக்கையாளர் அனுபவத்தை உயர்த்தவும் அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் 100 கோடி இந்திய ரூபாயை முதலீடு செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின் முதல் முறையாக இந்தியாவிற்கு நெல்சன் வருகை புரிகிறார். இது ஆம்வேயின் உலகளாவிய வளர்ச்சி சார்ந்த உத்தியில் நாட்டின் முக்கிய பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு இந்த வட்டாரத்தில் உள்ளடக்கிய மற்றும் நிலையான முன்னேற்றத்திற்கான நிறுவனத்தின் நீண்டகால உறுதிப்பாட்டை மறுபடியும் உறுதிசெய்கிறது.

ஆம்வேயின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மைக்கேல் நெல்சன் கூறுகையில்,

“ஆம்வேயின் உலகளாவிய தொலைநோக்குப் பார்வையின் மையத்தில் இந்தியா இருந்து வருகிறது. இது அதன் டிஜிட்டல் அதிகாரம் பெற்ற மக்கள் தொகை, துடிப்பான, இளம் பணியாளர்கள் மற்றும் செழிப்பான கிக் பொருளாதாரம் ஆகியவற்றால் இயக்கப்படும் ஆற்றலின் ஒரு மையமாகும்.ஆம்வேயைப் பொறுத்தவரை இந்தியா மாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறது. இந்த மாற்றத்தை இயக்க முக்கியமான முன்னுரிமைகளில் கவனம் செலுத்தி, குறிப்பிடத்தக்க முதலீடுகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம். நமது மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தை வலுப்படுத்துதல், வளர்ந்து வரும் நுகர்வோர் தேவைகளை நிறைவுசெய்ய புத்தாக்க உருவாக்கத்தை விரைவுபடுத்துதல் மற்றும் கல்வியின் மூலமும் பயிற்சியின் மூலமும் விநியோகஸ்தர் பங்காண்மைகளை ஆழப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். விரைவான பொருளாதார முன்னேற்றம், நல்வாழ்வில் அதிகரித்து வரும் முழுமையான கவனம் ஆகியவற்றின் மூலம் இந்தியா நமது உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக மாற தயாராக உள்ளது. நாட்டின் துடிப்பு, பன்முகத்தன்மை, ஆற்றல் மற்றும் தொழில் முனைவோர் மனப்பான்மை ஆகியவை பொருளாதார அதிகாரம் மற்றும் நல்வாழ்வு மூலம் சிறந்த வாழ்க்கையை வாழ மக்களுக்கு உதவும் ஆம்வேயின் நோக்கத்துடன் துல்லியமாக ஒத்துப்போகின்றன.

உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பத்தாண்டை நாங்கள் கொண்டாடும் இந்த வேளையில், நாங்கள் கட்டமைத்ததைப் பற்றி பெருமைப்படுகிறோம். வரவிருக்கும் மிகச் சிறந்த வாய்ப்புகளை எண்ணி அதிகமான உத்வேகத்தைப் பெறுகிறோம்.” நிறுவனத்தின் நேரடி இருப்பை விரிவுபடுத்துவதன் மூலமும், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட தளவமைப்புகள், அர்ப்பணிப்புள்ள பயிற்சி மண்டலங்கள் மற்றும் மேம்பட்ட சேவை அனுபவங்களுடன் ஏற்கனவே உள்ள கடைகளை ஈடுபாட்டுடன் கூடிய மையங்களாக மாற்றுவதன் மூலமும் விநியோகஸ்தர் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதை இந்த 100 கோடி இந்திய ரூபாய் முதலீடு,நோக்கமாகக் கொண்டுள்ளது. தயாரிப்பைப் பற்றிய அறிவு, தரநிலையை உறுதிப்படுத்துதல், வாடிக்கையாளர் ஈடுபாட்டை வலுப்படுத்தும் சான்றளிப்பு மற்றும் தொழில்முனைவோரின் வெற்றியை உறுதுப்படுத்துவதில் உதவி ஆகியவற்றின் மூலம் விநியோகஸ்தர்களை வலிமைப்படுத்துவதிலும் இது கவனம் செலுத்தும்.

ஆம்வே இந்தியாவின் நிர்வாக இயக்குனர் ரஜ்னீஷ் சோப்ரா கூறும்போது,

“இந்தியா தனது விக்சித் பாரத் 2047 என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி முன்னேறி வரும் இந்த வேளையில் உள்நாட்டில் எங்கள் இருப்பை வலிமைப்படுத்துவதன் மூலமும், மக்கள் மற்றும் புத்தாக்கங்களில் முதலீடு செய்வதன் மூலமும் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்திற்குப் பங்களிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றார்.

மேலும் படிக்க