April 11, 2018
தண்டோரா குழு
சென்னை சேப்பாக்கத்தில் இயக்குனர் பாரதிராஜா, அமீர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது,நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்;ஆனால் எங்கு என்பதை கூற முடியாது.சிலர் நேற்று நடந்ததை வன்முறை என்கின்றனர்.அது வன்முறையல்ல. எதிர்வினை அதனால் எதிர்வினையை மட்டும் பூதாகரமாக பேசுவது சரியல்ல நாளை பிரதமர் வரும்போது கருப்புக் கொடி காட்டுவது நிச்சயம்.
அடுத்த ஐபிஎல் போட்டியின்போதும் போராட்டம் நடைபெறும்,அது வேறுவிதமாக இருக்கும்.ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார் அவருக்கு வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர் போராட்டத்தில் எதிர்ப்புதான் தெரிவிக்கப்பட்டது யார் யாரையும் தாக்கவில்லை.