March 27, 2020
தண்டோரா குழு
அடிப்படை தேவைகளுக்காக வெளிவே வரும் மக்களை அடிப்பதை நிறுத்துங்கள், என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கோயம்புத்தூர் மனித உரிமைகள் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வீட்டினை விட்டு வெளியேற கூடிய நிலை நிலவுகிறது. ஆனால் அவ்வாறு வரக்கூடிய மக்களை எந்தவொரு கேள்வியும் கேட்காமல் தடியால் காவல்துறையினர் தாக்குகின்றனர், இது கண்டனத்திற்கு உரியது எனவும், இதனை காவல்துறையினர் உடனடியாக நிறுத்த வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு, கோவை மனித உரிமை அமைப்பினை சேர்ந்தவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.மேலும் 144 தடை உத்தரவினை மீறியதாக அதிகார்கள் கண்மூடித்தனமாக தாக்குவது மனித உரிமை மீறல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல் இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான மனித உரிமைகளை மீறுவதாகும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
144 தடை உத்தரவின்படி 4 நபர்களுக்கு மேல் செல்பவர்களே தண்டனைக்குரியவர்களாய் கருதப்படுவார்கள், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, சிறிது காலம் காவலில் வைக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்படுவார். விசாரணைக்கு பின்னர், அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் ஒரு மாதம் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.