• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அடிப்படை வசிதிகளை செய்து தர வலியுறுத்தி மலைகிராம மக்கள் மனு

December 20, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் ஆனைமலை டாப்சிலிப் கோழிக்கமுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில்

தங்கள் கிராமத்தில் மலசர், மலைப்புலையர், காடர் இனத்தை சேர்ந்த 185 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கிராமத்தில் உள்ள மக்களில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வனத்துறையில் யானை வளர்ப்பு, உதவி பணியாளர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், சூழல் கண்காணிப்பாளர் என பணிபுரிந்து வரும் நிலையில் தங்கள் கிராம மக்களுக்கு அடிப்படை வசிதிகள் இல்லாமல் தவித்து வருவதாகவும் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தந்து உதவ வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.

தரமான கான்கிரீட் வீடுகளை கழிப்பறை குளியலறை வசதியுடன் கட்டி தர வேண்டும். யானை முகாமிற்கு அருகிலேயே கிராமம் இருப்பதால் கிராமத்திற்கும் யானை முகாமிற்கும் இடையில் தடுப்பு சுவர் அமைத்திட வேண்டும்.கிராமத்திலேயே குடிநீர் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். தங்கள் கிராமத்திற்கு மின்வசதி செய்து தர வேண்டும். டாப் சிலப் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முழு நேர மருத்துவர் செவிலியரை பணியமர்த்த வேண்டும்.
சாலை வசதிகளை மேம்படுத்தி காலை மாலை பேருந்து சேவையை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு தொழில் வாய்ப்பு ஈட்ட கூடிய பயிற்சி அளிக்க வேண்டும். கோரிக்கைகளை மனுவில் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்க