April 13, 2018
தண்டோரா குழு
சிறுமி ஆசிபா படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நடிகை வரலட்சுமி அடடா… என்ன மாதிரியான நாட்டில் நாம் வாழ்கிறோம் வெட்கமாக இருக்கிறது என டுவீட் செய்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி ஆசிஃபா கடந்த ஜனவரி மாதம் 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த கொடூர சம்பவதிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.பலரும் ‘ஜஸ்டிஸ் பார் ஆசிஃபா’ #JusticeForAsifa என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தி டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில்,
ஒரு அப்பாவி ஆத்மாவை சிதைத்து படுகொலை செய்திருக்கிறார்கள்.வெட்கமாக இருக்கிறது. குற்றவாளியை பாதுகாக்கின்றனர் அவனை காக்க போராடுகின்றனர்.இந்த மனிதனை காக்க சட்டமா? அடடா… என்ன மாதிரியான நாட்டில் நாம் வாழ்கிறோம்!!! என்று பதிவிட்டுள்ளார்.