July 10, 2018
தண்டோரா குழு
அஞ்சல் துறையில் புதியதாக பயன்படுத்தி வரும் மென்பொருள் மற்றும் இணைய சேவை குறைபாடுகளை களைய வலியுறுத்தி,அஞ்சல் துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அஞ்சல் நிலைய வேலைகளுக்காக சி எஸ் ஐ எனப்படும் புதிய மென்பொருள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது.இந்த மென்பொருளின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் பல முரண்பாடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.குறிப்பாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில்,காலதாமதமாகுவதாகவும்,இதனால் உடனடியாக இதனை சரிசெய்ய வேண்டும் அல்லது பழைய முறையையே பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
மேலும்,தனியார் மையத்திடம் இந்த மென்பொருள் பயன்பாடு அளிப்பதால்,இந்த துறையை தனியார் மயமாக்கும் செயலில் அரசு ஈடுபடுவதாகவும் எனவே உடனடியாக இதனை தடுக்க வேண்டும், இல்லையேல் அஞ்சல் நிலைய ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.