• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அஜித் பட இயக்குநர் மர்ம மரணம் – அழுகிய நிலையில் சடலம் மீட்பு

August 2, 2018 தண்டோரா குழு

இயக்குநர் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர் உடுமலைப் பேட்டையை சேர்ந்த சிவக்குமார். அஜித் நடித்த ரெட்டை ஜடை வயசு, அர்ஜூன் நடித்த ஆயுத பூஜை படங்களை இயக்கி உள்ளார்.

இவர் சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் அவரது வீட்டில் வசித்து வருகிறார். இதுவரை இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில், இவரது வீட்டில் இருந்து துர்நாற்றாம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார் சிவக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சிவக்குமார் இறந்து கிடந்துள்ளார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. உடலைக்கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த விருகம்பாக்கம் போலீசார் இது கொலையா, தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க