• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் (இந்தியா) அமைப்பின் கோவை மைய புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

July 2, 2023 தண்டோரா குழு

அசோசியேசன் ஆப் கன்சல்டிங் சிவில் இன்ஜினியர்ஸ் (இந்தியா) அமைப்பின் கோவை மையத்தின் தலைவராக ஏ. சுதாகர் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக்
கொண்டனர்.

கட்டுமானத் தொழில் வளர்ச்சி , கட்டுமானப் பொறியாளர்களின் லட்சியங்களை ஊக்குவித்தல்,அவர்களுக்கான தொழில்நுட்ப அறிவை விரிவாக்கம் செய்தல்,கூட்டம், கருத்தரங்கு கட்டுமானத் தொழில் மாநாடு சார்ந்த உள்ளிட்டவைகளை பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அசோசியேஷன் ஆப் கன்சல்டிங் சிவில் என்ஜினியர்ஸ் (இந்தியா) அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

இந்தியா முழுவதும் இதற்கு 32 மையங்கள் உள்ளன.அதில் ஒன்றான கோவை மையம் சிறப்பாகவும் துடிப்புடனும் செயல்பட்டு சார்பில் கட்டுமானத் தொழில்நுட்பம் சார்ந்த வருகிறது.கோவை மையம் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கட்டுமான நிறுவனங்கள்,இந்திய கட்டிடக் கலைஞர்கள் சங்கம்,கோயம்புத்தூர் பில்டர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம்,இந்திய கட்டிடக் கலைஞர்கள்,இந்திய கான்கிரீட் நிறுவனம் போன்ற பல செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை மையத்தின் புதிய தலைவர் மற்றும் அலுவலக நிர்வாக குழு பதவி ஏற்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள ரெசிடென்சி டவர்சில் இன்று நடைபெற்றது. கோவை மையத்தின் தலைவராக டாக்டர் ஏ.சுதாகர் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் புதுடெல்லி,கட்டுமானத் தொழில் மேம்பாட்டுக் கவுன்சில் , இயக்குனர் ஜெனரல் பி.ஆர்.ஸ்வரூப் , கட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சிலின் கார்ப்பரேட் விவகாரங்கள் மூத்த இயக்குனர் அசுதோஷ் பரத்வாஜ்,ஓய்வு பெற்ற தமிழ்நாடு போலீஸ் சூப்பிரெண்ட் கலியமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு கட்டுமான சங்கங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டன.

மேலும் படிக்க