• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அசாமில் மக்கள்தொகையை கட்டுப்படுத்த புதிய திட்டம்

April 10, 2017 தண்டோரா குழு

அசாமில் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்காக புதிய கொள்கைகளை அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கும், சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் அரசு வேலையில் இருப்பதற்கான தகுதி கிடையாது.

டிராக்டர் பெறுதல், அரசு வீடு பெறுதல் உள்ளிட்ட வேலைவாய்ப்பிற்கான அரசு நலத்திட்டங்களை பெறவும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருக்கக் கூடாது என்ற விதி பொருந்தும்.

உள்ளாட்சி உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கும் இந்த விதியை கட்டாயமாக்க மாநில தேர்தல் கமிஷனிடம் கேட்கப்பட்டுள்ளது.

அனைத்து பெண்களுக்கும் பல்கலை., வரையில் இலவச கல்வி வழங்கப்படும். இதில் போக்குவரத்து, புத்தகங்கள், விடுதி உள்ளிட்ட செலவினங்களும் அடங்கும். இதனால் பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தும் அவலம் தடுக்கப்படும்.

பெண்களுக்கு அரசு பணி மற்றும் தேர்தலில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

முதியோர், பெண்கள், ஆதரவற்றோரை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள், மத தலைவர்கள், என்ஜிஓ.,க்கள், எம்.பி.,க்கள், மீடியாக்கள் மூலம் விழிப்புணர்வு கொண்டு வரப்படும்.

மேலும் இந்த கொள்கைகள் மீது ஜூலை மாதம் வரை மக்களின் கருத்து கேட்கப்பட உள்ளது. அதன் பிறகு நடக்கும் சட்டசபை கூட்டத்தில் இது தொடர்பான விவாதம் நடத்தப்படும். அதனைத் தொடர்ந்து இந்த புதிய கொள்கை தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க