• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அசாமில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 யானைகள் ரயில் மோதி உயிரிழப்பு

December 2, 2021 தண்டோரா குழு

அசாமில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் மோரிகான் மாவட்டம் ஜாகிரோடு அருகே 2 யானைகள் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளன. அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த திப்ருகார் நகருக்குச் செல்லும் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் யானைகள் மீது மோதியது.

இதில் சில அடி தூரம் சென்று 2 யானைகளும் இழுத்துச் செல்லப்பட்டன. ஒரு யானை தண்டவாளத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு யானை பள்ளத்தில் விழுந்து மரணம் அடைந்தது. ஒரு யானையின் முறிந்த தந்ததை வனத்துறையினர் அகற்றி எடுத்தனர்.

இறந்த 2 யானைகளையும் புல்டோசர் இயந்திரம் மூலம் தண்டவாளம் அருகிலேயே குழி தோண்டி வனத்துறையினர் புதைத்தனர். அப்போது ஏராளமான பொதுமக்கள் குழிக்குள் உப்பை தூவி தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.

அசாமில் சுமார் 5000 காட்டு யானைகள் வாழ்ந்து வரும் நிலையில், ஆனால் காட்டு யானைகள் அடிக்கடி ரயிலில் மோதி இறப்பது வாடிக்கையாக உள்ளது. நாடு முழுவதும் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் மண்டலத்தில் ரயில்களின் வேகத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுக்க தொடங்கி உள்ளது.

கடந்த வாரம் கோவையில் தண்டவாளத்தை கடக்க முயன்ற கர்ப்பமாக இருந்த யானை உள்பட 4 யானைகள் உயிரிழந்த சோக சம்பவத்தின் சுவடு மறைவதற்குள்ள அசாமில் 2 யானைகள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க