• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அங்கன்வாடி மையத்தை மீண்டும் திறக்க கோரி செம்மேடு மக்கள் கோரிக்கை

July 17, 2023 தண்டோரா குழு

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில் செம்மேடு பகுதி அளித்துள்ள மனுவில்,

கோவை பேரூர் அருகே உள்ள செம்மேடு பகுதியில் காந்தி காலனி உள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று செயல்பட்டு வந்த நிலையில் அதில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். திடீரென அங்கன்வாடி மையம் மூடப்பட்டது.

இதனால் குழந்தைகள் மட்டுமன்றி அப்பகுதியில் உள்ள கர்பிணி பெண்களும் சத்து மாவு உள்ளிட்டவற்றில் வாங்குவதில் பாதிக்கப்படுவார்கள். எனவே மூடப்பட்ட அங்கன்வாடி மையத்தை மீண்டும் திறக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க