February 23, 2021
தண்டோரா குழு
2வது நாளாக மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கும்மியடித்து,ஒப்பாரி வைத்து நூதனமுறையில் போராட்டம் நடத்தினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மூன்று அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.மேலும், கடந்த 38 ஆண்டுகளாக குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பிற அரசு துறைகளில் பணிபுரிந்து வரும் அங்கன்வாடி ஊழியர்களின் நிலை மோசமாகவுள்ளதாகவும், தங்களுக்கு வழங்க வேண்டிய முறையான கால முறை ஊதியம், அங்கன்வாடி ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு வழங்குவதை போன்ற குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் பணி ஓய்வு பெறும்போது ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பணி கொடையாக குறைந்தபட்சம் ரூபாய் 10 லட்சம் ரூபாய் 5 லட்சம் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்று விரைவில் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே போராட்டம் நடத்த அனுமதி மறுகப்பட்டதால், போராட்ட காரர்கள் சாலையில் கும்மியடித்தும், ஒப்பாரி வைத்தும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.