• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அகஸ்டி ஜுவல்ஸின் பிரம்மாண்ட தொடக்க விழா -தங்க காதணிகளுக்கான பிரத்யேக ஆன்லைன் ஸ்டோர்

February 12, 2022 தண்டோரா குழு

ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் டெக்சோன் – AIC Raise யில் தங்க காதணிகளுக்கென்றே பிரத்யேகமாக ஆரம்பிக்கப்பட்ட ” அகஸ்டி ஜூவல்ஸ் ” என்ற ஆன்லைன் ஸ்டோரின் பிரம்மாண்ட தொடக்க விழா இன்று நடைபெற்றது.

கோவையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் தங்க நகை தயாரிப்பிலும் வியாபாரத்திலும் சிறந்து விளங்கும் சர்வமங்கல் ஜூவல்லர்ஸ் தான் , அகஸ்டி ஜுவல்ஸ் என்ற காதணிகளுக்கான பிராண்டை ஆரம்பிக்கிறது.லாஜிமேக்ஸ் டெக்னாலஜி அகஸ்டி ஜுவல்ஸூக்கு தொழில்நுட்ப சேவை வழங்குகிறது மற்றும் 3 மாங்க்ஸ் டிஜிட்டல் நிறுவனம் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவை வழங்குகிறது.

கோயம்புத்தூரில் தங்க நகைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் ஒரு நம்பகமான நிறுவனம் தான் சர்வமங்கல் ஜூவல்லர்ஸ் . எனவே,சர்வமங்கல் ஜூவல்லர்ஸ் உயர்தர தங்க காதணிகள் தயாரிப்பதில் அனுபவம் வாய்ந்தவர்கள்.உலகளவில் வாடிக்கையாளர்கள் தளத்தை விரிவுபடுத்துவதற்காக அகஸ்டி ஜூவல்ஸ் என்ற காதணிகள் விற்கும் ஆன்லைன் தளத்தை தொடங்கினார்கள்! அகஸ்டி ஜூவல்ஸில் நீங்கள் வாங்கும் அனைத்து தங்க காதணிகளும் BIS ஹால்மார்க் தர சான்றிதழ் பெற்றுள்ளன.

பாரம்பரிய முறைப்படி தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு அகஸ்டி ஜூவல்ஸின் காதணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன . பல ஆண்டுகள் நீடித்துழைக்கும் தரமான தங்கக் காதணிகள் அகஸ்டி ஜூவல்ஸ் ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கும்.அகஸ்டி ஜூவல்ஸில் பல வடிவமைப்புகளில் வித விதமான காதணிகள் உள்ளது.சிறிய இதய வடிவில்,மலர்கள் வடிவில் ,அழகுபடுத்தப்பட்ட ஸ்டெர்லிங் மற்றும் எமோனா போன்ற பல்வேறு வகையான தங்க காதணிகள் அகஸ்டி ஜுவல்ஸில் கிடைக்கும்.

மேலும் குழந்தைகளுக்கு , இளம்பெண்களுக்கு , அம்மாக்களுக்கு என்று அனைத்து வகையான பெண்களின் வயதிற்கு ஏற்றவாறு காதணிகளை இங்கு வாங்கலாம். நன்கு வடிவமைக்கப்பட்ட தங்கத் காதணிகள் ரூபாய் 5000 / – முதல் அகஸ்டி ஜுவல்ஸில் மட்டுமே வாங்க முடியும். இது போன்ற BIS ஹால்மார்க் தரத்துடன் குறைந்த விலையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட காதணிகள் வேறு எந்த தங்க நகை கடையிலும் கிடைக்காது.

நீங்கள் இப்போது www.augustijewelz.com என்ற இணையதளத்தில் ஷாப்பிங் செய்யலாம். அகஸ்டி ஜுவல்ஸ் இணையதளத்தில் நீங்கள் காதணிகளை எளிதாக ஆர்டர் செய்யலாம். 24/7 வாடிக்கையாளர் சேவையும் , இந்தியா முழுவதும் இலவச ஷிப்பிங்கும் அகஸ்டி ஜுவல்ஸ் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது . கூடிய விரைவில் அகஸ்டி ஜூவல்ஸின் மொபைல் செயலி தொடங்கப்பட உள்ளது.அதை நீங்கள் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வைரம் , பிளாட்டினம் , வெள்ளி காதணிகள் மற்றும் 24K , 22K , 18K போன்ற பல்வேறு காரட்களில் தங்க காதணிகள் வெளியிட அகஸ்டி ஜூவல்ஸ் திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க