• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஃபேஸ்புக்கில் போலி கணக்குகளை நீக்கும் பணி தொடங்கியது

April 13, 2017 தண்டோரா குழு

ஃபேஸ்புக்கில் உள்ள போலி கணக்குகளை கண்டறிந்து அகற்றும் பணி தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில்சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டிவிட்டருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு அதிக அளவில் பயனாளர்களும் உள்ளனர். ஃபேஸ்புக்கில் பலர் கணக்குத் தொடங்கி தங்கள் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

எனினும், சிலர் போலியான கணக்குகளை வைத்து தவறான தகவலை பரப்புவதாக அவ்வபோது புகார்கள் வந்துள்ளது.கடந்தாண்டு நடந்த அமெரிக்க‌ அதிபர் தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் மீது புகார்கள் கூறப்பட்டிருந்தன.

இதையடுத்து, ஃபேஸ்புக்கில் போலி கணக்குகளை கண்டறிந்து அகற்றும் பணியை அந்நிறுவனம் தற்போது மேற்கொண்டுள்ளது. இதனை ஃபேஸ்புக் ‌நிறுவனத்தின் பயனாளி‌கள் பாதுகாப்பு பிரிவு தலைவர் ஷப்னம் ஷேக்தெரிவித்துள்ளார்.

மேலும், நவீன யுக்திகள் மூலம் போலி கணக்குகள் கண்டறியப்பட்டு வருவதாகவும் பிரான்ஸ் நாட்டில் இம்முறையை பயன்படுத்தி 30 ஆயிரம் போலி கணக்குகள் ‌அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க