• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்கேட்டிங் போட்டியில் கோவை மாணவர் தங்கம் வென்று அசத்தல்

February 7, 2023 தண்டோரா குழு

ஏரோஸ்க்கட்டோபார் பால் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பாக தேசிய அளவிலான ஏரோஸ்க்கட்டோபார் ஸ்கேட்டிங் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் தேனேவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, மஹாராஸ்ட்ரா, ராஜஸ்த்தான், பஞ்சாப், மத்திய பரதேஷ், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்தி 300 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகம் சார்பாக கோவை, திருச்சி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவடங்களிலிருந்து 57 மாணவர்கள்,17 மாணவிகள் என மொத்தம் 74 பேர் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் 10,12,14,18 வயதினருக்கு உட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடந்தது.இதில் 18 வயதினருக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மாணவர் அஸ்வின் கலந்துகொண்டார். இவர் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இறுதி போட்டியில் தங்கம் வென்றார்.

இதன் மூலம் மாணவர் அஷ்வின் ஆசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார்.மேலும், இப்போட்டியில் தமிழக அணி மொத்தம் 6 பிரிவுகளில் தங்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க