• Download mobile app
30 Jun 2022, ThursdayEdition - 2332
FLASH NEWS
  • அக்னிபாத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு ஜூன் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!
  • தமிழக நிதிநிலை அறிக்கை ஏமாற்றமே – தேமுதிக தலைவர் விஜயகாந்த்
  • 14.40 லட்சம் பேரின் நகைக்கடன்கள் தள்ளுபடி அதிரடி அறிவிப்பு
  • 12 டூ 18 வயசுக்கு இனி கோவாக்சின்.. அனுமதி கொடுத்தது மத்திய அரசு!
  • 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • “பாஜகவை விட வேளாண் சட்டங்களை பழனிசாமிதான் அதிகமாக ஆதரித்தார்!” – முதலமைச்சர் ஸ்டாலின்
  • ஏன் இந்தி மொழியை கற்க கூடாது? – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்
  • 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் – பிரதமர் மோடி அறிவிப்பு !

வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம்

May 17, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் காந்திபுரத்தில் டவுன் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், ஆம்னி பேருந்து நிலையம் என 4 பேருந்து நிலையங்கள் உள்ளன.

மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மதுரை, சிவகாசி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பஸ்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் வளர்ந்து வரும் கோவை மாநகரை கருத்தில் கொண்டு கோவை மாநகராட்சியால் வெள்ளலூரில் 178 கோடி ரூபாய் செலவில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த பேருந்து நிலையத்தில் ஒரே சமயத்தில் 140 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த பேருந்து நிலையத்தில் வணிக வளாகம், உணவு விடுதி, விளம்பர பலகைகள் போன்றவைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘வெள்ளலூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.140 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி செய்யப்பட்டு வருகிறது.விரைவில் பணிகள் முடிக்கப்படும்,’’ என்றார்.

மேலும் படிக்க