• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவாக சார்ஜ், ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 461 கிமீ ; எம்.ஜி மின்சார வாகனங்கள் கோவையில் அறிமுகம்

March 13, 2024 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் உள்ள எம்ஜி ஷோரூமில் எம்ஜி காமெட் வகைகளான எக்சைட் எப்சி மற்றும் எக்ஸ்க்ளூசிவ் எப்சி எலக்ட்ரிக் வாகனங்களும், எம்ஜி இசட் எக்ஸ் (ZS) எக்சைட் ப்ரோ எலக்ட்ரிக் வாகனமும் அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஜி காமெட் வகை வாகனங்கள் விரைவாக சார்ஜ் செய்யும் வசதியுடன் ரூ.8.23 லட்சம் மற்றும் 9.13 லட்சம் விலையில் கிடைக்கின்றன.

இந்த வகை கார்களில் எலக்ட்ரானிக் பார்க்கிங் ப்ரேக்,எலக்ட்ரானிக் நிலைத்தன்மை கட்டுப்பாடு, பின்புற டிஸ்க் ப்ரேக், மலை நிறுத்தக் கட்டுப்பாடு, டர்ன் இண்டிகேட்டர் உள்ளிட்ட பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் உள்ளன.‘எக்சைட் ப்ரோ’ – டூயல் பேன் பனோரமிக் ஸ்கை ரூப்புடன், கவர்ந்திழுக்கக்கூடிய ரூ. 19.98 லட்சம் என்னும் விலையில்,அதன் முன்னணி மின்சார வாகனமான எம்ஜி இசட் எஸ் (zs)இன் புதிய மாறுபட்ட வடிவமாக அமைந்துள்ளது.

இந்த எலக்ட்ரிக் வாகனத்தில் நல்ல ஆன்-ரோட் தோற்றம், ஓட்டுவதற்கான வசதி, விசாலமான மற்றும் ஆடம்பரமான வசதியான உட்புறங்களை அளிக்கிறது. இதில் உள்ள பேட்டரியானது,ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் 461 கிமீ செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக வாடிக்கையாளர் உண்மையான சாவி இல்லாமல் காரை இயக்கி ஓட்ட உதவும் டிஜிட்டல் சாவி பூட்டுதல் மற்றும் திறத்தல் வசதியினை வழங்குகிறது.

எம் ஜி ஆனது தொடர்ந்து புதுமையான செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ந்திழுக்கும் மதிப்புகூட்டப்பட்ட அம்சங்களுடன் கூடிய உற்சாக மூட்டக்கூடிய தயாரிப்புகளை வழங்குவதில் உறுதிபூண்டுள்ளது என்று எம்ஜி மோட்டார் இந்தியாவின் துணை நிர்வாக இயக்குநர் கவுரவ் குப்தா தெரிவித்தார்.

மேலும் படிக்க