• Download mobile app
22 Oct 2024, TuesdayEdition - 3177
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வளர்ச்சி சாமியை இருக்கும் இடத்திலிருந்து அகற்றித்தான் வர வேண்டுமா?

June 30, 2024 ஸ்ருதி

கோவை மருதமலை முருகன் கோவிலில் கொடி மர மண்டபம் மற்றும் ரோப் கார் பணிக்காக நவகிரஹ சன்னதி அகற்றம். 12ஆம் நூற்றாண்டின் சங்க தமிழ் மன்னர்களால் கட்ட பட்ட இந்த முருகன் கோவில், பெரும்பாலும் நோய்களிலிருந்து நிவாரணம் தரும் முருகனாக போற்றி மக்கள் நாடுகின்றனர். மேலும் இந்த கோவில் முருகனின் ஏழாவது வீடாக கருதப்படுகிறது.

இந்த கோவிலில் வலம்புரி விநாயகர், வரதராஜப் பெருமாள் சன்னிதி, பட்டீசுவரர், மரகதாம்பிகை, நவகிரகங்கள் சன்னிதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், சண்டிகேசுவரர் சாமி சன்னதிகள் அமைந்துள்ளது.

தற்பொழுது, கொடி மர மண்டபம் மற்றும் ரோப் கார் பணிக்காக கோவில் முன்புறத்திலுள்ள உலோக கொடி மரம் மற்றும் நவகிரஹ சன்னதி அகற்ற பட்டு உள்ளது. இது மற்றும் இன்றி பழங்கால தூன்கள், யானை சிற்பங்களும் அகற்றபட்டு இருக்கிறது.

இதனைபற்றி சங்கரன், கோவில் பக்தர் கூறுகையில்,

“நான் ஒவ்வொரு வாரமும் முருகனை பார்க்க இங்கே வருவேன்.எனக்கு முருகன் என்றால் மிகவும் பிடிக்கும். கிட்ட தட்ட 2 ஆண்டுகளாக ஒன்றிக்கும் மேற்பட்ட பணிகள் கோவிலில் மேற்கொள்ள பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக நவகிரஹ சன்னதி இல்லை. கொடி மரமும் இல்லை. கடவுளை தூக்கி விட்டு அலங்காரம் செய்ய போகிறார்கள். சிற்பக்கலையை மற்றும் நமது கலாச்சார பெருமையை காட்சி படுத்தி காட்டும் கோவில் தூண்களும் இல்லை. சிமெண்ட் கலவையில் புதிய தூண்கள் அமைத்து இருக்கிறார்கள்.

நவகிரஹம் கோவில் வளாகத்தில் அமைக்கப்படும் என்கிறார்கள். இது வீடு கட்டுவதற்கு ஒரு இடத்தில் அடி கல் நாட்டிவிட்டு வேற ஒரு நிலத்தில் வெளி போடுவது போல் உள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் இருக்கும் சாமியை தூக்கி விட்டு வளர்ச்சி என்ற பெயரில் அறநிலையத்துறை சம்பாதிப்பதால் பக்தர்களுக்கு என்ன பயன் என்று கேள்வி எழுப்பினார்.

இதை பற்றி கோவில் பணிகளில் ஈடுபட்டு வரும் நபர் கூறுகையில்,

“கோவையை சேர்ந்த ஒரு தனியார் கல்வி நிறுவம் கொடி மர மண்டபம் கட்டி தர உள்ளனர் மேலும் அறநிலையத்துறை மேற்கொள்ளும் ரோப் கார் வசதிக்கான பணியில் நவகிரஹ சன்னதி, கொடி மரம் அகற்றி இருக்கிறார்கள். பணிகள் முடிந்த பின்னர் நவகிரஹ சன்னதி மற்றும் கொடி மரம் கோவில் வளாகத்தில் அமைக்க படும். மற்றும் கோவில் கும்பாபிஷேகம் நடத்த ஆலோசனை மேற்கொள்ள பட்டு வருகிறது” என்றார்.

மேலும் படிக்க