• Download mobile app
15 Sep 2019, SundayEdition - 1313
FLASH NEWS
  • காஷ்மீரில் கட்டுப்பாடுகளை கைவிட ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தல்!
  • தங்கம் விலை தொடர்ந்து சரிவு – ஒரு கிராம் தங்கம் ரூ.3,645க்கு விற்பனை
  • 3 நாடுகள் பயணத்தில் ரூ.8830 கோடி முதலீடு : முதலமைச்சருக்கு ராமதாஸ்,வாசன் பாராட்டு
  • ராஜபாளையம் : விசைத்தறி கூடத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு
  • விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சிக்கிறோம் – இஸ்ரோ

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.2000 நிதியுதவி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

February 11, 2019 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் விதி எண்.110-இன் கீழ் முதல்வர் ஒரு அறிவிப்புபை வெளியிட்டார் அதில் “தமிழக அரசு, ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, பல்வேறு நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. பல மாவட்டங்களில் ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், குறிப்பாக விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழக அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர். இதற்கென, 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என இவ்வாறு அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தார்.

மேலும் படிக்க